ADDED : மார் 04, 2026 05:51 AM
அ நிறம் | அளவு
தேனி: அல்லிநகரம் ஹைஸ்கூல் தெருவை சேர்ந்தவர் சசிக்குமார் 43. இவரது அத்தைக்கும், அதேபகுதியை சேர்ந்த முத்துபாண்டி, அருண்குமார் ஆகியோருக்கும் இடையே பணப்பிரச்னை இருந்தது.
அதனை சசிக்குமார் பேச்சுவார்த்தை நடத்தி முடித்து வைத்தார். இந்நிலையில் கடந்த 25ந் தேதி அல்லிநகரம் வீரப்ப அய்யனார் கோயில் ரோட்டில் நடந்து சென்றார்.
அப்போது முத்துபாண்டி, அருண்குமார் அங்கு வந்து சசிக்குமாருடன் வாக்குவாதம் செய்து சசிக்குமாரை தாக்கினர். சசிக்குமார் புகாரின்பேரில் அல்லிநகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
