ADDED : ஆக 08, 2025 03:20 AM
அ நிறம் | அளவு
தேனி: பெரியகுளம் எ.புதுக்கோட்டை பரமேஸ்வரி 36. தேனியில் டெய்லராக பணிபுரிகிறார்.
இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன் பழக்கமான அரண்மனைப்புதுார் முத்தாலம்மன் கோயில் தெரு வெற்றிக்குமார் 41, தன்னிடம் பழக வேண்டும், செலவுக்கு பணம் தர வேண்டும் என தகராறு செய்தார். இப்பிரச்னை தொடர்பாக பரமேஸ்மரி தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். விசாரணைக்காக பரமேஸ்வரி, வெற்றிக்குமார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் சென்றனர். ஸ்டேஷன் முன் வெற்றிக்குமார் பரமேஸ்வரியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். காயமடைந்த பரமேஸ்வரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது புகாரில் வெற்றிகுமார் மீது வழக்கு பதிந்து தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
