UPDATED : ஜூலை 06, 2026 10:27 PM
ADDED : ஜூலை 06, 2026 10:24 PM
அ நிறம் | அளவு
தேனி: ஊராட்சிகளில் குப்பை இல்லா கிராமம் திட்ட செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
ஊராட்சி பகுதிகளில் 'மாஸ் கிளினிங்' பணிகள் சில நாட்களாக நடந்து வருகிறது. தேனி ஒன்றியம் நாகலாபுரத்தில் மெயின் ரோட்டில் குப்பை கொட்டியிருந்த பகுதி புதர் மண்டி காணப்பட்டது. அந்த பகுதியில் இருந்து குப்பை, புதர்கள் மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன. அப்பகுதியில் ஊராட்சி சார்பில் ரோட்டோர பூங்காவாக மாற்றும் பணி நேற்று துவங்கியது. நிகழ்ச்சிக்கு பி.டி.ஓ.,க்கள் சரவணன், ரவிச்சந்திரன் தலைமை வகித்தனர். துணை பி.டி.ஓ., தனலட்சுமி, திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் சுருளி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
