ADDED : மார் 19, 2026 06:14 AM
பெரியகுளம்: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் ஏ.டி.எம்., இயந்திரத்தை கல்லால் உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட டி.கள்ளிபட்டியை சேர்ந்த கருப்பையா 32, என்பவர் கைது செய்யப்பட்டார்.
பெரியகுளம்- தேனி ரோடு, சினிமா தியேட்டர் அருகே கனரா வங்கி ஏ.டி.எம்., உள்ளது. நேற்று அதிகாலை 1:00 மணிக்கு மர்மநபர் ஒருவர் ஏ.டி.எம்., மில் நுழைந்து, ஏ.டி.எம்., மெஷினை கல்லால் உடைத்து கொள்ளையடிக்க முயற்சித்தார். கண்காணிப்பு கேமரா மூலம் வெளியூரிலிருந்து இதை பார்த்த கான்ட்ராக்டர் மகேஷ்குமார், வங்கி மேலாளர் கவிதாவிற்கு தகவல் தெரிவித்தார். கவிதா புகாரில் போலீசார் ஏ.டி.எம்., மையத்திற்கு வந்தனர். அங்கு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருந்த டி.கள்ளிப்பட்டி நேருஜி தெருவை சேர்ந்த கருப்பையாவை போலீசார் கைது செய்தனர்.
இதே போல் கடந்த மாதம் பெரியகுளம் வடக்கு அக்ரஹாரத்தில் சிட்டி யூனியன் வங்கி ஏ.டி.எம்.,மில் கொள்ளை முயற்சியும். தேவதானப்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே ஸ்டேட் பாங்க் ஏ.டி.எம்., மிஷின் உடைத்து கொள்ளை சம்பவம் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
