ADDED : அக் 03, 2024 06:23 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி அல்லிநகரம் காளியம்மன் கோயில் தெரு சீத்தாலட்சுமி 33. இவரது கணவரின் அண்ணணுக்கும், உறவினர் அல்லிநகரம் அவ்வையார் தெரு ராமசந்திரனுக்கும் பிரச்னை இருந்தது. சீத்தாலட்சுமி, அவ்வையார் தெருவில் உறவினர் விஜயாவுடன் நின்றிருந்தார். அவர் மீது ராமச்சந்திரன் ஓட்டி வந்த ஆட்டோ மோதியது.
தட்டிக்கேட்ட சீத்தாலட்சுமியை கொலை மிரட்டல் விடுத்தார். சீத்தாலட்சுமி புகாரில் அல்லிநகரம் போலீசார் ராமச்சந்திரனை கைது செய்தனர்.
