ADDED : நவ 23, 2025 03:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட் கிராம்ஸ்லாண்ட் டிவிஷனைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் சுதீஷ் 26. இவருக்கு திருமணம் முடிந்து மனைவி சிந்து, இரண்டு பிள்ளைகள் ஆகியோர் உள்ளனர்.
இந்நிலையில் கணவன், மனைவி இடையே இரு தினங்களுக்கு முன்பு குடும்ப தகராறு ஏற்பட்டது.
சிந்து பிள்ளைகளை அழைத்துக் கொண்டு பெரியவாரை எஸ்டேட்டில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.
அதனால் மனம் உடைந்த சுதீஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.

