ADDED : மார் 24, 2026 05:19 AM
அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே ரோசனப்பட்டியை சேர்ந்தவர் முத்துராஜா 30, சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார்.
நேற்று முன்தினம் முத்துராஜா ஆட்டோவை ஓட்டிச் சென்ற போது கட்டுப்பாடு இழந்து ஆசாரிபட்டி நாகலாறு ஓடை பாலம் அருகே ரோட்டில் கவிழ்ந்து முத்துராஜ் பலத்த காயமடைந்தார்.
அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். ராஜதானி போலீசார் விசாரிக்கின்றனர்.
