/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
போக்குவரத்து விதிமீறலை படம் எடுத்து அனுப்பும் தானியங்கி கேமராக்கள் அமைப்பு: தேனி தொழில்நுட்ப போலீசார் நடவடிக்கை

ADDED : நவ 28, 2025 08:10 AM

தேனி: தேனியில் போக்குவரத்து விதிமீறல்களை போட்டோ எடுத்து அனுப்பும் தானியங்கி கேமராக்களை பொறுத்தி போலீசார் கண்காணித்து வரு கின்றனர்.
மாவட்டத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களான தேனிநேருசிலைப் பகுதி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வெளிப்புற வாசல், பழனிசெட்டிபட்டி, மாநில எல்லை பகுதிகளான குமுளி, கம்பமெட்டு, போடி மெட்டு மற்றும் மாவட்ட எல்லை பகுதிகளில் 32 கேமராக்கள் பொறுத்தப் பட்டுள்ளது.
இந்த கேமராக்கள் (ஆப்டிகல் கேரக்டர் ரெக்ககனெக் ஷன்) நவீன தொழில் நுட்படத்தில் செயல்படும்.
இதில் அனைத்து காட்சிகளையும் பதிவு செய்து உடனுக்குடன் மாவட்ட கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும்.
தொழில்நுட்ப இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், எஸ்.ஐ.,க்கள் சதீஷ்குமார், முருகன் ஆகியோர் நவீன கட்டுப்பாட்டு அறை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இன்ஸ்பெக்டர் கூறுகையில், தேனி நேரு சிலை அருகே 2 ஏ.என்.பி.ஆர்., கேமராக்களும், ஐ.பி., கேமராக ஒன்றும் பொறுத்தப் பட்டுள்ளன.
ஆண்டிபட்டி திம்மரச்சநாயக்கனுார் சோதனை சாவடியில் ஐ.பி., 4, ஏ.என்.பி.ஆர்., கேமராக்கள் 4 கேமராக்களும், தேனி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வெளிப்புறத்தில் தலா 1 வீதம் 2 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட எல்லைகளான கம்பம் பகுதியில் நடந்த கொலை வழக்கு, பிற பகுதிகளில் நடந்த வழக்குகளில் குற்றவாளிகள் தப்பித்து சென்ற வாகனங்களை கண்டறிந்து விசாரணைக்கு உதவி யுள்ளோம்.
45 நாட்களுக்கு பதிவுகளை சேமிக்க முடியும். விசாரணை அதிகாரிகளின் கோரிக்கைக்கு ஏற்ப தரவுகள் சேமித்து வைத்தும் வழங்கப்படுகிறது. தவறு செய்பவர்கள், விதிமீறலில் ஈடுபடுபவர்கள் ஓடவோ,ஒழியவோ முடியாது என்றார்.