ADDED : ஜன 10, 2024 12:43 AM
தேனி : மாவட்ட வனத்துறை, தேனி வனச்சரகம், கெப்பு ரெங்கன்பட்டி கிராம வனக்குழு சார்பில், தமிழக உயிர்ப்பண்மைப் பாதுகாப்பு, பசுமையாக்குதல் திட்டம் குறித்தும் காலநிலை மாற்றம், மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள மோதல் பற்றிய விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கிராம வனக்குழுத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். தேனி ரேஞ்சர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். தேனி வனவர் ஆனந்தபிரபு, வனக்காப்பாளர்கள் விக்னேஸ், காளிரத்தினம், கிராம முக்கிய நிர்வாகிகள், விவசாயிகள் பங்கேற்றனர். இதில் காடுகள் பாதுகாப்பு, வனவிலங்குகள், மண், நீர், மரம், மண் உயிரினங்கள், பறவைகள் பாதுகாத்தல், மனிதவளம், இயற்கை, சுற்றுச்சூழல், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை காக்கவும், மனிதன் நோய் இன்றி சுகாதாரமாக வாழ்வதற்கான விழிப்புணர்வு நாடகம் மூலம் மக்களுக்கு விளக்கப்பட்டது.
வன உயிரினங்களால் ஏற்படும் பயிர் சேத நிவாரணம் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன.
இதில் கிராம பொது மக்கள், விவசாயிகள், இளைஞர்கள் பயனடைந்தனர்.
