ADDED : ஜன 26, 2025 06:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி :   தேனி தானம் அறக்கட்டளை சார்பில் நடந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் விழிப்புணர்வு வாக்கத்தானை கலெக்டர் ஷஜீவனா துவக்கி வைத்தார்.
நேரு சிலை அருகே துவங்கி உழவர் சந்தை யில் முடிந்தது.
பின்  விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மகளிர் சுயஉதவிக்குழுவினர் பங்கேற்றனர்.
விழாவில் ஓய்வு பெற்ற வேளாண் துணை இயக்குநர் சரவணன், போலீஸ் எஸ்.ஐ., ராஜமாணிக்கம், உத்தமபாளையம் உழவர் உற்பத்தியாளர் சங்க தலைவர் ஜெயராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவை களஞ்சியம் மண்டல அலுவலர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

