ADDED : பிப் 07, 2024 12:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், வனத்துறை, கடமலைக்குண்டு லா தொண்டு நிறுவனம் சார்பில் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
கம்பத்தில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டுத்துறை பொறியாளர் விஸ்வநாதன் துவங்கி வைத்தார். தொடர்ந்து லா கலைக்குழுவினர், கம்பம், உத்தமபாளையம், சின்னமனுார், வீரபாண்டி , தேனி பழைய பஸ் ஸடாண்ட், புது பஸ் ஸ்டாண்டில் நிறைவடைந்தது. கலை நிகழ்சசிகளில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், திடக்கழிவு மேலாண்மையின் பயன்கள், நீர் பாதுகாப்பு முறைகள், விழிப்புணர்வு நாடகங்கள் நடத்தினர். ஏற்பாடுகளை மாவட்ட தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன், மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் செய்திருந்தனர்.

