ADDED : ஜன 22, 2025 09:23 AM
தேனி, : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், 'பிட்' இந்தியா இயக்கம் வழிகாட்டுதலில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை அனைத்து மக்களும் பெற வலியுறுத்தி தேனி தபால்துறை கோட்டம்சார்பில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது.
கண்காணிப்பாளர் குமரன் துவங்கி வைத்தார். தேனி தபால்நிலையத்தில் ஊர்வலம் துவங்கி வழியாக காமராஜர் நினைவு பஸ் ஸ்டாண்டை அடைந்து, மீண்டும், தபால் நிலையத்தில் நிறைவு பெற்றது.
இதுபோல் போடி, பெரியகுளம் தலைமை தபால் நிலையங்களில் விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலங்கள் நடந்தன.
இதில் போஸ்ட் மேன்கள், ஊழியர்கள் பங்கேற்று, சைக்கிள் ஓட்டுவதன் முக்கியத்துவம் தொடர்பாகவும், சைக்கிள் ஓட்டுவதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கினர்.
தேனியில் ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை வளர்ச்சித்திட்டஅலுவலர் செல்வக்குமார் செய்திருந்தார்.