UPDATED : அக் 17, 2026 11:32 PM
ADDED : அக் 17, 2026 06:02 PM

அ நிறம் | அளவு
தேனி: தேனி ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி., பிரவீன் கவுதம் தலைமையில் போலீஸ் பிரிவுகள் சார்ந்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. இதில் சிங்கப்பெண் படை, துப்பாக்கி கையாளுதல் பிரிவு, போக்குவரத்து போலீசார், தடய அறிவியல் பிரிவுகள் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு செய்யப்பட்டது. துப்பாக்கிகளில் ரகங்கள், அதன் பயன்பாடுகள், ரேடார் கண் உள்ளிட்ட போக்குவரத்து உபகரணங்களின் பயன்பாடுகள் குறித்தும் விளக்கப்பட்டது. போலீசார் சார்பில் நிகழ்ச்சி குறித்த போதிய முன்னறிவிப்புகள் இல்லாததால் மாணவர்கள் வருகை குறைந்து காணப்பட்டது.
போலீசார் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சி
