ADDED : மார் 02, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
கூடலுார்: கம்பம் ஆதிசுஞ்சனகிரி மகளிர் கல்லுாரியில் பேரவை குழு சார்பில் கல்லூரி செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், இணைச் செயலாளர் வசந்தன், ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி முன்னிலையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
முதல்வர் ரேணுகா வரவேற்றார். ரயில்வே துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் வழிகாட்டுதல் மைய உதவியாளர் ஜெயக்குமார் விளக்கினார். தொழில்நுட்பம் மற்றும் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் குறித்து விளக்கப்பட்டது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு மாணவிகள் பயன்பெற ஆலோசனை வழங்கப்பட்டது.
