தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி

விழிப்புணர்வு மாரத்தான் போட்டி


UPDATED : ஜூலை 26, 2026 05:38 PM

ADDED : ஜூலை 26, 2026 05:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2026 05:38 PM ADDED : ஜூலை 26, 2026 05:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கூடலுார்:கூடலுாரில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடந்தது. போட்டி சீலைய சிவன் கோயில் அருகில் துவங்கியது. ஆண்கள், பெண்களுக்கு தனித்னியாக நடந்தது. ஆண்கள் தேசிய நெடுஞ்சாலை வழியாக லோயர்கேம்ப் பகவதியம்மன் கோயில் வரை சென்று திரும்பும் வகையில் 10 கி.மீ., தூரமும், பெண்களுக்கு தம்மணம்பட்டி வரை சென்று திரும்பி வகையில் 8 கி.மீ., தூரமும் நிர்ணயிக்கப்பட்டது. போட்டியில் ஏராளமானோர் பங்கேற்றனர். மாரத்தானை கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரம் துவக்கி வைத்தார். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை உறுப்பினர் திருக்குமரன் உள்ளிட்டோர் செய்திருந்தார்.

கையெழுத்து இயக்கம்

சின்னமனூர்: சின்னமனூரில் 'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் போதையில்லா தமிழகம் கையெழுத்து இயக்கம் நடந்தது. பழநியை சேர்ந்த நிர்வாகி கனகராஜ் தலைமை வகித்து, கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்தார். சின்னமனூர் நிர்வாகி சசி ஏற்பாடுகளை செய்திருந்தார். நிர்வாகிகள் பொன் ஆனந்தன், ஈஸ்வரன், கோபிநாத், ராமசாமி, ஆதிகேசவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடக்கு ரதவீதி, நடுத்தெரு, வ.உ.சி. தெரு, மின்நகர், சிவசக்தி நகர் உள்ளிட்ட வீதிகளில் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us