ADDED : நவ 14, 2025 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் மகளிர் சுயஉதவி குழுக்கள் சார்பில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த முகாம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை பெரியகுளம் சப் கலெக்டர் ரஜத்பீடன் துவக்கி வைத்தார். தேனி நகராட்சி அலுவலகம் வரை ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தில் மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.

