ADDED : ஜன 20, 2026 06:12 AM

தேனி: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறை சார்பில் தேனியில் பிரசன்டேஷன் கான்வென்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஜன.,27ல் மாற்றுத்திறன் மாணவர்களுக்கான மருத்துவ முகாம் நடக்கிறது.
இதற்காக விழிப்புணர்வு ஊர்வலம் அல்லிநகரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள வட்டார வளமையத்தில் இருந்து பஸ் ஸ்டாப் வரை நடந்தது. ஊர்வலத்தை பி.இ.ஓ., ஸ்ரீதேவி, மாவட்ட உள்ளடங்கிய கல்வி ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி துவக்கி வைத்தனர்.
அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை பாக்கியலட்சுமி, வளமைய மேற்பார்வையாளர் மனோரஞ்சிதம் தலைமை வகித்தனர். ஊர்வலத்தில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
மாற்றுத்திறன் மாணவர்களின் உரிமை, கல்வியின் அவசியம், அவர்களுக்கான கல்வி சார்ந்த செயல்பாடுகள், மருத்துவ முகாம் பற்றிய விழிப்புணர்வு பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர். கல்வி ஒருங்கிணைப்பாளர் இந்திராணி உள்ளிட்டோர் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

