ADDED : ஏப் 01, 2026 05:16 PM

அ நிறம் | அளவு
தேனி:மாவட்டத்தில் நுாறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்கேற்ற மூன்று சக்கர வாகன விழிப்புணர்வு ஊர்வலம் தேனி நகராட்சி அலுவலகத்தில் துவங்கியது. மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றது. டூவீலர்களில் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன. டி.ஆர்.ஓ.,ராஜகுமார் முன்னிலை வகித்தார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி, மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
