ADDED : ஏப் 06, 2026 05:41 PM

அ நிறம் | அளவு
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டி ஒன்றியம், திம்மரசநாய்ககனூர் ஊராட்சியில் பள்ளி மாணவர்கள் சார்பில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை சத்தியசீலா துவக்கி வைத்தார். ஊராட்சி அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் முக்கிய தெருக்கள் வழியாக சென்று பள்ளி வளாகத்தில் முடிந்தது.
100 சதவீதம் ஓட்டு பதிவை வலியுறுத்தியும், ஓட்டு அளிப்பது நமது உரிமை, நமது கடமை என்று கோஷமிட்டும் சென்றனர். ஊர்வலத்தில் ஊராட்சி பணியாளர்கள், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பயனாளிகள், பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஊராட்சி செயலாளர் புஷ்பம் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.
