ADDED : ஏப் 08, 2026 08:54 PM
அ நிறம் | அளவு
தேனி;தேனி நகராட்சி சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பங்களாமேட்டில் இருந்து பழைய பஸ் ஸ்டாண்ட் வரை விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தை தாசில்தார் சதீஸ்குமார், கமிஷனர் பார்கவி துவக்கி வைத்தனர்.
நகர்நல அலுவலர் கவிப்பிரியா முன்னிலை வகித்தார். நகராட்சி எஸ்.ஐ.,க்கள் ஜெயசந்திரன், சரவணன், ஜெயசீலன், அலெக்ஸ்பாண்டியன் ஒருங்கிணைத்தனர். ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
