ADDED : ஏப் 10, 2026 05:05 PM

அ நிறம் | அளவு
பெரியகுளம்:பெரியகுளத்தில் மாவட்ட நீதிமன்றம் 'சமரச தீர்வு தினத்தை' முன்னிட்டு பெரியகுளம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு ஊர்வலத்திற்கு மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றம் நீதிபதி ரஜினி
தலைமை வகித்தார். நீதிபதிகள் பரமேஸ்வரி, சங்கர், கணேசன், ஜெயபாரதி, சந்திரசேகரன், கீதா, அனுராதா, பெரியகுளம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்ட வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள், நீதிமன்ற பணியாளர்கள் பங்கேற்று, சமரச தீர்வு மையத்தின் முக்கியத்வத்தை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். நீதிமன்றம் வளாகத்தில் துவங்கிய ஊர்வலம் திருவள்ளுவர் சிலை அருகே நிறைவு பெற்றது.
--
