ADDED : பிப் 06, 2026 05:55 AM
அ நிறம் | அளவு
தேனி: தேனி தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நிறுவனங்கள், கடைகளில் உள்ளக புகார் குழு அமைத்தல் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
மாவட்ட தொழிலாளர் நல அமலாக்கப்பிரிவு உதவி ஆணையர் ராமராஜ் தலைமை வகித்தார்.
சமூக நலத்துறை அலுவலர்கள், நிறுவன உரிமையாளர்கள், மனித வள மேலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். உள்ளக குழு அமைப்பதின் முக்கியத்துவம், குழுவின் தலைவராக பெண்கள் நியமித்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுத்தல், குழுவினை பதிவு செய்யும் முறைகள் உள்ளிட்ட விவரங்கள் விளக்கப்பட்டது.
