/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
ஐ.டி.ஐ.,யில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
ஐ.டி.ஐ.,யில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : நவ 12, 2025 12:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி அரசு ஐ.டி.ஐ.,யில் உள்ளக புகார் குழு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் தலைமை வகித்தார். உள்ளக புகார் குழு உறுப்பினர்கள் கவிதா, முத்துக்கிருஷ்ணன், ரில்வானா பர்வீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு பார்வையாளர்களாக மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் சாருமதி, சேவை மைய நிர்வாகி தீபா பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொடர்பான பிரச்னைகள், தீர்வுகள், சட்டங்கள் பற்றி மாணவிகளுக்கு விளக்கப்பட்டது.

