ADDED : ஆக 22, 2026 06:44 PM
அ நிறம் | அளவு
தேனி, ஆக.
23–தேனி கம்மவார் சங்கம் பாலிடெக்னிக்கில் மாவட்ட சமூக நலத்துறை சார்பில் என்.எஸ்.எஸ்., மைபாரத்(நேரு யுவகேந்திரா) மாணவர்களுக்கு சமூகத்தில் முதியோர்களை பாதுகாத்தல் என்ற தலைப்பில் வழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட சமூக நல அலுவலர் விஷ்ணுபிரியா தலைமை வகித்தார். பாலிடெக்னிக் முதல்வர் தர்மலிங்கம் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சமூகத்தில் முதியவர்களின் பொறுப்புகள், அவர்களை பாதுகாப்பதன் அவசியம் பற்றி விளக்கப்பட்டது. டாக்டர் திருக்குமரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். என்.எஸ்.எஸ்., அலுவலர் செல்வகுமார், அசோக் குமார், ஞானதாஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.
