ADDED : செப் 20, 2026 05:13 PM
அ நிறம் | அளவு
தேனி, செப்.21–
தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சர்வதேச பாம்புக்கடி தடுப்பு தினம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் ரோகினி தேவி தலைமை வகித்தார். ஆர்.எம்.ஓ., சிவக்குமார், ஏ.ஆர்.எம்.ஓ., ஈஸ்வரன் முன்னிலை வகித்தனர். மருத்தவமனை வளாகத்தில் ‘சினேக்கத்தான்’ விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பொதுமக்களுக்கு, பாம்புக்கடியால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது, சிகிச்சை பற்றிய வீடியோ வெளியிட்டும், நோட்டீஸ் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான மருத்துவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
