UPDATED : நவ 26, 2026 04:10 PM
ADDED : நவ 26, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
தேனி: தேனி அருகே தப்புக்குண்டுவில் உள்ள அரசு சட்டக் கல்லுாரியில் இந்திய அரசியலமைப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் சண்முக பிரியா தலைமை வகித்தார். தேனி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சந்தான கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்திய அரசியலமைப்பின் சிறப்புகள், அடிப்படை உரிமை, கடமைகள், சமூக நீதி ஆகியவை குறித்து சட்டக் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மத்திய அரசின் மை பாரத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுல் கிருஷ்ணன் செய்தார்.
