ADDED : ஆக 30, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் அரசு பொறியியல் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் சார்பில் போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
முதல்வர் வசந்தநாயகி தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்ட ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் முன்னிலை வகித்தார். போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அச்சடிக்கப்பட்ட பதாகைகள் ஏந்தியபடி தர்மத்துப்பட்டி, மேலச்சொக்க நாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மாணவ, மாணவிகள் ஊர்வலமாக சென்றனர்.
ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்., திட்டக் குழுவினர் செய்திருந்தனர்.