ADDED : நவ 12, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு அவசியம் பற்றிய விழிப்புணர்வு ஊர்வலத்தை பங்களாமேட்டில் டி.ஆர்.ஓ., ராஜகுமார் துவக்கி வைத்தார். குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பார்த்திபன், உதவி நிர்வாக பொறியாளர் செல்வி, உதவிப்பொறியாளர் அருண்குமார், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
ஊர்வலம் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை சென்று மீண்டும் பங்களாமேட்டில் நிறைவடைந்தது.
வடிகால் வாரியம் சார்பில் விழிப்புணர்வு பிரச்சார குறும்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. குறும்படத்தை எல்.இ.டி., பொருத்திய வாகனம் மூலம் மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

