ADDED : ஆக 14, 2026 12:33 AM

அ நிறம் | அளவு
தேனி: சுதந்திர தினத்தை முன்னிட்டு அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என வலியுறுத்தி தபால் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
தேனி தலைமை தபால் நிலையத்தில் ஊர்வலத்தை கோட்ட கண்காணிப்பாளர் குமரன் துவக்கி வைத்தார். ஊர்வலம் நேருசிலை வரை சென்று மீண்டும் தலைமை தபால் நிலையத்திற்கு திரும்பியது. தபால் அலுவலக பணியாளர்கள் பங்கேற்றனர்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் ரூ.25க்கு தேசிய கொடி விற்பனை செய்யப் படுகிறது.
தேவைப்படும் பொதுமக்கள் வாங்கி கொள்ளலாம் என தபால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
