ADDED : ஆக 10, 2025 03:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் வேலை வாய்ப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.
செயலாளர் புருஷோத்தமன், உப தலைவர் ராமநாதன், நிர்வாக குழு உறுப்பினர் சிவப்பிரகாசம், முதல்வர் ஞானசேகர் (பொறுப்பு) முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக காந்தி கிராமப் பல்கலைக் கழக பேராசிரியர் ஆனந்த் ராஜேந்திரன் பங்கேற்று 'கார்ப்பரேட் உலகில் மாணவர்கள் தன்னம்பிக்கை உடன் வேலை வாய்ப்பு திறன்களை வளர்த்துக் கொள்வது குறித்து,' பற்றி விளக்கினார்.
ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளர்கள் பாப்புலட்சுமி, அமல பிரியா, அபிநயா ஆகியோர் செய்திருந்தனர்.

