ADDED : ஆக 16, 2025 02:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேனி கம்மவார் சங்கம் கலை அறிவியல் கல்லுாரியில் உள்புகார் குழு, உள்தர உறுதிக்குழு செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் நடந்தது.
உள் புகார் ஒருங்கிணைப்பாளர் மைதிலி வரவேற்றார். முதல்வர் வெற்றிவேல் கவுரவித்தார். சமூக நலத்துறையின் நிர்வாக அலுவலர்கள் தீபா, கீதா பங்கேற்று பெண்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து பேசினார். உதவி மைய எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். உறுதிக்குழு ஒருங்கிணைப்பாளர் அன்னலட்சுமி நன்றி தெரிவித்தார்.

