ADDED : டிச 13, 2025 05:45 AM
அ நிறம் | அளவு
போடி: போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் உள்புகார் குழு சார்பில் இணைய வழியில் பெண்களுக்கு எதிராக நடக்கும் துன்புறுத்தல், வன் முறைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். பேராசிரியர் ஞானசேகரன் முன்னிலை வகித்தார். பேராசிரியர் நித்தியானந்த குமாரி வரவேற்றார்.
போடி டவுன் எஸ்.ஐ., கிருஷ்ணவேணி இணைய வழியில் பெண்கள் துன்புறுத்தல், வன்முறைகள் குறித்து விளக்கினார். பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடந்தது.
வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை நூலகர் மங்கை, ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.
