UPDATED : செப் 03, 2026 07:11 PM
ADDED : செப் 03, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
போடி:பிரதம மந்திரி காசநோய் இல்லா இந்தியா இயக்க திட்டத்தின் கீழ் போடி ஏல விவசாயிகள் சங்க கல்லூரியில் என்.சி,சி., மாவட்ட காசநோய் பிரிவு சார்பில் காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
கல்லூரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். திண்டுக்கல் 14 பட்டாலியன் லெப்டினல் கர்னல் அமிர்தராஜ் முன்னிலை வகித்தார். என்.சி.சி., திட்ட அலுவலர் நாகலிங்கம் வரவேற்றார். மாவட்ட காசநோய் தடுப்பு மைய துணை இயக்குனர் ராஜபிரகாஷ், சுகாதார கல்வியாளர் தர்மேந்திர கண்ணா காசநோய் பற்றிய விழிப்புணர்வு குறித்து என்.சி.சி., மாணவர்களுக்கு எடுத்துக் கூறினர்.
