தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/சைபர் குற்றங்களை தவிர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்

சைபர் குற்றங்களை தவிர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்

சைபர் குற்றங்களை தவிர்க்க விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : பிப் 29, 2024 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 29, 2024 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேனி : தேனி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சார்பில், சைபர் குற்றங்களை தடுக்கும், தவிர்க்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் தேனி கொட்டக்குடி பாலம் அருகே துவங்கியது. முன்னதாக தேனி டி.எஸ்.பி., பார்த்திபன், 'சைபர் குற்றங்களில் இருந்து தப்பிக்கும் நடைமுறைகள், தவிர்க்கும் வழிமுறைகள் குறித்து பேசினார். தேனி அரசு ஐ.டி.ஐ., முதல்வர் சேகரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர்.

சைபர் கிரைம் எஸ்.ஐ.,க்கள் தாமரைக்கண்ணன், அழகுபாண்டி, முன்னிலை வகித்தனர். அரசு ஐ.டி.ஐ., மாணவர்கள் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

'மைக்' மூலம் சைபர் குறறங்களை தடுக்கும் நடைமுறைகள் குறித்து ஒலிபரப்பு செய்யப்பட்டன.

ஊர்வலம் பங்களாமேடு பஸ் நிறுத்தத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் சைபர் குற்றங்கள் ஏற்படாமம் இருக்கும் நடைமுறைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us