ADDED : ஏப் 10, 2026 05:29 PM

அ நிறம் | அளவு
தேனி:மாவட்ட விளையாட்டுத்துறை சார்பில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு நடைபயண ஊர்வலம் நடந்தது.
கலெக்டர் ரஞ்ஜீத்சிங் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். விளையாட்டு வீரர்கள், கல்லுாரி மாணவர்கள் நடைபயணத்தில் பங்கேற்றனர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் துவங்கி பங்களமேட்டில் முடிந்தது. டி.ஆர்.ஓ., ராஜகுமார், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தமிழரசி, மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
