நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்: கூடலுாரில் சோலைக்குள் கூடல் அமைப்பினர் நேற்று ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அமைப்பு சார்பாக பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து
துணிப் பைகளை பயன்படுத்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். கடைகளுக்கு முன்பு மஞ்சப்பை வழங்கினர். பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்கினர். புத்தாண்டை வரவேற்கும் விதமாக இழுப்பை மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

