ADDED : மார் 30, 2026 04:14 AM
அ நிறம் | அளவு
தேனி: சட்டசபை தேர்தலில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. வைகை அணையில் ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூன் பறக்கவிடப்பட்டது. விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத் சிங் துவக்கி வைத்தார்.
டி.ஆர்.ஓ. ராஜகுமார் முன்னிலை வகித்தார். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ரஜத்பீடன், கவிதா, மகளிர் திட்ட இயக்குநர் சந்திரா, வைகை அணைஉதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மருதுபாண்டி உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.
