நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி : வீரபாண்டி கிழக்குத்தெரு பூவேந்திரராஜா 29. தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவியர் விடுதி சமையலர். இவரது மனைவி முருகஜோதி. 25. இவரது 10 மாத பெண் குழந்தையை மதிக் ஷாவை துாக்கிக் கொண்டு, அருகில் உள்ள தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். அங்கு செப்.27ல் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது குழந்தை தரையில் கிடந்த வெண்டைக்காயின் பூவை எடுத்து தனது வாயில் போட்டு, விழுங்கி விட்டது.
இதனால் குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வீரபாண்டி ஆரம்பு சுகாதார நிலையில் முதலுதவி செய்து தேனி அரசு மருத்துவக்கல்லுாரியிலும் பின் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் பயன்இன்றி உயிரிழந்தார். வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.