ADDED : செப் 20, 2024 06:30 AM
அ நிறம் | அளவு
பெரியகுளம் : பெரியகுளம் திருவள்ளுவர் சிலை அருகே பா.ம.க., சார்பில் சமூக நீதி விளக்க பொதுக்கூட்டம் நகர செயலாளர் முத்தையா தலைமையில் நடந்தது.
வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிர் நீத்த 21 பேரின் படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
