ADDED : ஏப் 20, 2026 11:32 PM
அ நிறம் | அளவு
தேனி:சட்டசபை தேர்தலை முன்னிட்டு ஏப்.,21 முதல் ஏப்., 24 வரை, மே 2 முதல் மே 4 வரை மாவட்டத்தில் இயங்கி வரும் பட்டாசு கடைகள், வெடிபொருள் கிட்டங்கிகள் மூடியிருக்க வேண்டும்.
செயல்பட்டால் உரிமம் ரத்து செய்து உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.
