ADDED : ஜன 28, 2026 06:04 AM

தேனி: தேனியில் வங்கி ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்தம், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாரத்திற்கு 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பெரியகுளம் ரோட்டில் ஒன்று கூடி கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் ராதாகிருஷ்ணன், ஜெய்கிருஷ்ணன், சுப்பிரமணி, மகாலட்சுமி, லட்சுமணன், மகேந்திரன், ஆதிநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஜன. 25 ஞாயிற்றுக் கிழமை மற்றும் ஜன. 26 குடியரசு தினம் விடுமுறை நாட்களாக இருந்த நிலையில் 3-வது நாளாக நேற்று வேலைநிறுத்தத்தால் வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
