தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தேனி/ போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள்

 போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள்

 போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்படும் பேனர்கள்


ADDED : ஜன 21, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 21, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: தேனியில் அரசியல் கட்சியினர், வணிக நிறுவனங்கள் ரோட்டையொட்டி வைக்கும் பிளக்ஸ், பேனர்களால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டு விபத்துக்கள் நடப்பது தொடர்கதையாகிறது.

தேனியில் எங்கு திரும்பினாலும் பிளக்ஸ் பேனர்கள் ரோட்டை ஆக்கிரமித்துள்ளன. தனிநபர்கள் பிறந்தாள், நினைவுநாள் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் மற்றும் அரசியல் கட்சிகள் நிகழ்ச்சிகளுக்கு பேனர்களை ரோட்டோரங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக வைக்கின்றனர்.

இவர்கள் நகராட்சி, போலீசில் முறையான அனுமதியும் பெறுவதில்லை. தேனி என்.ஆர்.டி ரோடு சந்திப்பு, ஆனந்த மஹால் ரோடு சந்திப்பு, மதுரை, கம்பம், பெரியகுளம் ரோடுகளில் இருபுறங்கள் மற்றும் முக்கிய ரோடுகளின் சந்திப்புகளில் ரோட்டையொட்டியே வைக்கப்படுகின்றன. இதனால் டூவீலரில் செல்வோர் சிறு சிறு விபத்துகளில் சிக்கி காயமடைகின்றனர். குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்பட்டு விபத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. போக்குவரத்திற்கு இடையூறாக வைக்கப்படுகின்றன. எனவே, இதனை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us