/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
பராமரிப்பு பணிக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி
/
பராமரிப்பு பணிக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி
பராமரிப்பு பணிக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி
பராமரிப்பு பணிக்கு பின் சுருளி அருவியில் குளிக்க அனுமதி
ADDED : அக் 22, 2025 01:09 AM
கம்பம்: சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கால் நேற்று நான்காவது நாளாக குளிக்க அனுமதி இல்லை. வெள்ளம் வடிந்தாலும், பராமரிப்பு பணி நிறைவு செய்த பின் தான் குளிக்க அனுமதிக்கப்படும் என்று வனத்துறை தெரிவித்துள்ளது.
சுருளி அருவியில் அக். 17 இரவு பெய்த மழையால் இரவங்கலாறு , மணலாறு அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டது.
இதனால் சுருளி அருவியில் காட்டாற்று வெள்ளம் கரை புரண்டோடியது. வனத்துறை யினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அருவியில் குளிக்க தடை விதித்தனர். நேற்று நான்காவது நாளாக வெள்ளம் கொட்டி வருவதால், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினர் தடை விதித்துள்ளனர்.
ரேஞ்சர் பிச்சை மணி தலைமையிலான வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அருவியில் வெள்ளம் குறைந்தால் தான் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் அறிவித்திருந்தனர்.
ஆனால் அருவியில் இதுவரை நீர் வரத்து குறையவில்லை. மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது.
அக்.17ல் இரவு பெய்த கனமழையில் வந்த காட்டாற்று வெள்ளத்தில் அருவியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு கம்பிகள் சேதமடைந்துள்ளன.
வெள்ளத்தில் அடித்து வந்த பாறைகள் அருவியில் குளிக்கும் இடத்தில் கிடக்கிறது. அருவிக்கு வரும் படிக்கட்டுகள், பக்கவாட்டு கம்பிகள் சேதமடைந்தும் குளிக்கும் இடத்தில் மரம், செடிகள் கிடக்கின்றன.
இவற்றை அகற்றும் பணிகள், தடுப்பு கம்பிகளை புதுப்பிக்கும் பணிகள் செய்த பின்பு தான் குளிக்க அனுமதி வழங்க உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மேலும் வெள்ளம் குறைந்தால் தான் பராமரிப்பு பணிகள் செய்ய முடியும்.
எனவே இப்போதைக்கு ஒரு வாரத்திற்கு குளிக்க அனுமதிக்க முடியாத நிலை தான் உள்ளது என்கின்ற னர்.