ADDED : நவ 11, 2026 05:11 PM

அ நிறம் | அளவு
பெரியகுளம்: கும்பக்கரை அருவியில் நீர் வரத்து சீரானதால் இன்று (நவ.,11) முதல் குளிக்க அனுமதிக்கப்பட்டது.
பெரியகுளம் அருகே 8 கி.மீ., தூரத்தில் கும்பக்கரைஅருகி உள்ளது. கொடைக்கானல் மலை அடிவாரம் வட்டக்கானல், வெள்ளகெவி பகுதியில் பெய்யும் மழையால் அருவிக்கு தண்ணீர் வருகிறது. நவ.8 ல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நவ.10 வரை மூன்று நாட்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. நேற்று (நவ.,10) மாலை தண்ணீர் வரத்து சீரானதால் இன்று காலை முதல் அருவியில் குளிக்க அனுமதிக்கப்பட்டது. கும்பக்கரை அருவியில் 50 ஆண்டுகளில் முதன் முதலாக ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 4 முறை, அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக அக்.7, அக்.18, அக். 22, நவ.8 என குளிக்க தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
