/
உள்ளூர் செய்திகள்
/
தேனி
/
மாட்டுபட்டி படகு குழாமில் பீர், ஒயின் கிடைக்கும்: டீ, காபி கிடைக்காது; மூணாறு செல்லும் சுற்றுலாப் பயணிகள் அவதி

ADDED : அக் 13, 2025 03:43 AM

மூணாறு : மாட்டுபட்டி அணையில் படகு குழாம் வளாகத்தில் பீர், ஒயின் கிடைக்கும். ஆனால், டீ, காபி கிடைக்காது என்பதால் சுற்றுலாப் பயணிகள் அவதியுற்று வருகின்றனர்.
மூணாறு அருகில் உள்ள மாட்டுபட்டி அணை முக்கிய சுற்றுலாப் பகுதியாகும்.
மின்வாரியத்தினர் பராமரிக்கின்றனர். அணையில் மின்வாரியத்தின் ஹைடல் டூரிசம், மாவட்டச் சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலாப் படகுகள் இயக்கப்படுகின்றன. அவற்றில் பயணிக்க தினமும் நுாற்றுக்கணக்கில் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.
படகு சவாரிக்கு செல்லும் நுழைவுப் பகுதியில் இருந்து 300 மீட்டர் தொலைவில் படகு குழாம் உள்ளது. போகும் போது இறக்கமாகவும், வரும்போது ஏற்றமாகவும் உள்ளதால் பயணிகள் கடும் சிரமத்துடன் சென்று வருகின்றனர்.
படகு குழாம் வளாகத்தில் பல்வேறு கடைகள் தனியார் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி செயல்பட்டு வந்த ஓட்டல் 2 ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. தனியார் வசம் கடைகளை ஒப்படைக்கக் கூடாது என்ற நோக்கத்தில் ஓட்டலை இயக்காமல் பூட்டப்பட்டது என, சம்பந்தப்பட்டத்துறை சார்ந்த சிலர் தெரிவித்தனர்.
ஆனால் படகு குழாம் நுழைவு பகுதியில் தனியார் சார்பில் 2 மாதங்களுக்கு 'பீர்', 'ஒயின் பார்லர்' திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
படகு குழாம் வளாகத்தில் டீ, காபி, குளிர் பானம் உள்பட எதுவும் கிடைக்காததால் சிறுவர்கள், முதியவர்கள் ஆகியோர் கடுமையாக அவதிப்படுவது தொடர்கிறது.
ஹைடல் டூரிசம் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஹைடல் டூரிசம் இயக்குனராக பொறுப்பு வகித்த நரேந்திரநாத் வெல்லூரி மாற்றப்பட்டு, சமீபத்தில் புதிய அதிகாரி நியமிக்கப்பட்டார்.
அவர் மாட்டுபட்டியில் ஹைடல் டூரிசம் சார்பிலான கடைகள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறார். ஆகவே விரைவில் ஓட்டல் திறக்கப்படும்., என்றார்.