ADDED : நவ 08, 2026 04:29 PM

அ நிறம் | அளவு
தேனி: மாவட்டத்தில் இன்று (நவ.,8) தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்து, வீடுகளில் பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடினர். தேனி நகரில் பெரும்பாலான கடைகள் செயல்படவில்லை. இதனால் கடைவீதிகள், நகரின் முக்கிய பகுதிகளில் ஆட்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. பரபரப்பாக காணப்படும் பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு, கம்பம் ரோடுகளில் குறைந்த அளவு வாகனங்கள் இயக்கப்பட்டன. மதியம் ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்டில் பயணிகள் கூட்டம் இன்றி காணப்பட்டன. குறைந்தளவு பஸ்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் காத்திருந்து பயணித்தனர்.
