ADDED : பிப் 28, 2024 04:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி, : சின்னமனுார் நல்லி மெடரிக் பள்ளியில் மத்திய தொழிலாளர் நலத்துறையின் வருங்கால வைப்பு நிதி நிறுவனம், இ.எஸ்.ஐ.,சி., இணைந்து மாதாந்திர குறைதீர் முகாம் நடந்தது.
இ.எஸ்.ஐ.சி., மேலாளர் ஸ்ரீனிவாசன் முகாமை துவக்கி வைத்தார். இ.பி.எப்.ஓ., நோடல் அதிகாரி ரோஹினி முன்னிலை வகித்தார். முகாமில் இ.சி.ஆர்., பிறபடிவங்கள், கே.ஒய்.சி., உள்ளிடு, உறுப்பினர் விவரங்கள் திருத்தம், புதுப்பித்தல், முதன்மை நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள் யூ.ஏ.என்., உருவாக்கம் மற்றம் செயல்படுத்துல் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
முகாமில் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் தனலட்சுமி, ஆயிஷா பேகரம், வீரையா ஆகியோருக்கு ஓய்வூதிய ஆணை வழங்கப்பட்டது.

