UPDATED : நவ 30, 2026 12:00 AM
ADDED : நவ 29, 2026 11:48 PM

பெரியகுளம்: பெரியகுளம் தென்கரை வீச்சு கருப்பணசாமி கோயில் அருகே மை பாரத், பசுமைத்தோழர்கள் இணைந்து போதையில்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்ற தலைப்பில் சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர். மைபாரத் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார். டாக்டர் செல்வராஜ், பசுமைத்தோழர் ஒருங்கிணைப்பாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தனர்.
டி.எஸ்.பி., நல்லு விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கோயில் அருகே துவங்கிய சைக்கிள் விழிப்புணர்வு ஊர்வலம் திருவள்ளுவர் சிலை, வடக்கு அக்ரஹாரம், தெற்கு அக்ரஹாரம் வழியாக திருவள்ளுவர் சிலை அருகே நிறைவடைந்தது.
விழிப்புணர்வு ஊர்வலத்தில் பள்ளி, கல்லூரி, மாணவ, மாணவிகள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர். முன்னதாக போதைக்கு எதிராக கையெழுத்திட்டு உறுதிமொழி எடுத்தனர்.
