UPDATED : ஆக 16, 2026 05:37 PM
ADDED : ஆக 16, 2026 04:10 PM
அ நிறம் | அளவு
போடி:போடியில் சுதந்திர தினத்தை முன்னிட்டு வீ தி லீடர்ஸ் அமைப்பின் சார்பில் இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் நடந்தது. ஊர்வலம் போடி போஜன் பார்க்கில் துவங்கி கட்டபொம்மன் சிலை, காமராஜர் பஜார், தேவாரம் ரோடு வழியாக அரசு பொறியியல் கல்லூரி அருகே முடிந்தது.
இதில் மாணவர்கள், அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். ஊர்வலத்தில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ், மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. அமைப்பின் நிர்வாகிகள் முருகதாஸ், சீனிவாசன், ஹரிஹரன் ஊர்வலத்தை ஒருங்கிணைத்தனர்.
