ADDED : மார் 01, 2026 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உத்தமபாளையம்: மதுரை வேளாண் கல்லூரி மாணவி பிரவிஹா தலைமையில் மாணவிகள் கோம்பையில் தங்கி விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களை விளக்கி வருகின்றனர். தென்னையில் காணப்படும் இலைத் தின்னி மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்த கிரைசோபெர்லா முட்டை அட்டை பயன்படுத்துவது பற்றி விளக்கினார்கள்.
கிரைசோ பெர்லா என்பது பயனுள்ள பூச்சியாகும். இதன் இளம் புழுக்கள் தீங்கு விளைவிக்கும் பூச்சிகளை உண்ணி முறையில் கட்டுப்படுத்தும். இதனால் ரசாயன பூச்சி கொல்லி பயன்பாடு குறைந்து, சுற்றுப் புறச் சூழல் பாதுகாக்கப்படும்.
செலவு குறைவு , அதிக மகசூல் கிடைக்கும். இது பற்றிய கண்காட்சி அமைத்திருந்தனர். தென்னை விவசாயிகள் பங்கேற்றனர்.

